நேற்று தாமஸ் ஃப்ரீட்மேன், ஷேகர் குப்தாவுடன் NDTV-ன் Walk The Talk நிகழ்ச்சியில் வந்தார்.
தாமஸ் (டாம்) ஃப்ரீட்மேன் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் பத்தி எழுதுபவர். இப்பொழுதுதான் தி ஹிந்து சகட்டுமேனிக்கு நியூ யார்க் டைம்ஸ், கார்டியன் செய்தித்தாள்களிலிருந்து உருவி எடுத்து தனது நடுப்பக்கங்களை நிரப்புகிறதே... அதனால் நீங்கள் அனைவரும் ஃப்ரீட்மேனைப் படிக்காமல் இருந்திருக்க முடியாது. ஷேகர் குப்தா தி இந்தியன் எக்ஸ்பிரஸ் (மும்பை) பத்திரிகையின் ஆசிரியர். NDTV தொலைக்காட்சிக்காக மேற்படி நிகழ்ச்சியை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியின் எழுத்துவடிவம் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் வெளியாகும்.
தாமஸ் ஃப்ரீட்மேன் சமீபத்தில் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார் - The World Is Flat - உலகம் தட்டையானது. ஆஹா ஊஹோ என்று இந்தப் புத்தகத்தைப் பற்றிப் பலரும் புகழ்கிறார்கள். ஆனால் எனக்குப் பிடித்தது Matt Taibbi என்பவர் ஃப்ரீட்மேன் புத்தகத்தைக் குத்திக் குதறிக் கிழித்ததுதான். நான் ஃப்ரீட்மேன் புத்தகத்தை இன்னமும் படிக்கவில்லை. அவருடைய முந்தைய புத்தகமான The Lexus and the Olive Tree-ஐயும் படிக்கவில்லை. அதற்கு முந்தி அவர் எழுதிய வேறு எந்தப் புத்தகத்தையும் படிக்கவில்லை. அவர் எழுதும் பத்திகளை அவ்வப்போது படித்திருக்கிறேன்.
ஃப்ரீட்மேன் பெங்களூர் வந்திருக்கிறார். இன்போசிஸ் நந்தன் நீலகனியுடன் பேசியிருக்கிறார். பேச்சுவாக்கில் நீலகனி நிறுவனங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வுகள் குறைந்து "சமதளமாகிறது" என்று பொருள்படும்படி "Tom, the playing field is being leveled." என்று சொல்லியிருக்கிறார். உடனே ஃப்ரீட்மேன் ஆடிப்போய்விட்டாராம். "ஆஹா... இத்தனை நாள் ஜார்ஜ் புஷ் ஈராக் மீது தொடுத்த போரை அங்கு போய் ஐந்து நட்சத்திர ஹோட்டலில் உட்கார்ந்து கொண்டு எழுதித் தள்ளிக்கொண்டிருக்கும் வேளையில் உலகின் மற்றொரு மூலையில் என்னென்னவோ (ஆஃப்ஷோரிங், அவுட்சோர்சிங்) நடந்து விட்டதே, எதுவுமே தெரியவில்லையே தனக்கு" என்று அதிர்ந்துபோய்விட்டாராம். அத்துடன் நீலகனி சொன்னதை "உலகம் தட்டையானது" என்று பிடித்துக்கொண்டு அலைந்து அந்தப் பெயர் வைத்து ஒரு புத்தகத்தை எழுதிவிட முடிவு செய்துவிட்டார்!
சரி, நான் புத்தகத்தைப் பற்றி, ஒன்றும் படிக்காமல், இங்கு விமர்சனம் செய்யப்போவதில்லை. மற்றபடி டாமும், ஷேகரும் என்ன அளவளாவினர் என்று சில குறிப்புகள்.
* கி.பி 1400-1850 வரை நடந்தது உலகமயமாதல் 1.0. நாடுகளுக்கிடையேயான உலகமயமாதல் அது. ஒவ்வொரு நாடும் - முக்கியமாக ஐரோப்பிய நாடுகள் - தன் அதிகாரத்தை தன் நாட்டுக்கு வெளியேயும் நிலைநாட்ட முயற்சி செய்தது. ஏகாதிபத்தியம், காலனியாதிக்கம், இத்யாதி. 1850-2000 வரையிலாக நடந்தது பெரு நிறுவனங்கள் நிகழ்த்திய உலகமயமாதல். உலக்கமயமாதல் 2.0. பன்னாட்டு நிறுவனங்கள் ஆதிக்கம். 2000க்குப் பிறகு நடப்பது உலகமயமாதல் 3.0. இங்கு தனியார், சிறு நிறுவனங்கள் கூட உலகமயமாகிறார்கள்.
* அவர் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் பெற்றோர்கள் சொல்வார்களாம்: "சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"
* ஃப்ரீட்மேன் 1990களில் அளித்த மெக்டானல்ட்ஸ் தேற்றம்: "எந்த இரு நாடுகளில் மெக்டானல்ட்ஸ் சாப்பாட்டுக் கடைகள் இருக்கின்றதோ அவை தமக்குள் (ஆயுதச்) சண்டை போடுவதில்லை." இப்பொழுது கொடுத்திருக்கும் புது டெல் தேற்றம்: "எந்த இரு நாடுகள், (பெரு நிறுவனங்களுக்கான) ஒரே பொருள் வழங்கு சங்கிலியில் (Supply Chain) இணைந்துள்ளதோ அவை இரண்டுக்கும் இடையில் (ஆயுதச்) சண்டைகள் வருவதில்லை." எனக்கென்னவோ இந்தத் தேற்றங்களின் மாற்றே (converse) சரியான கூற்று என்று தோன்றுகிறது.
* டெல் கணினி நிறுவனத்துக்குச் சென்று பேசினாராம் ஃப்ரீட்மேன். பேச்சுக்கு காசு வாங்கக் கூடாது என்பது நியூ யார்க் டைம்ஸ் நிறுவன ஊழியர்களுக்கான கட்டுப்பாடாம். அதனால் அதற்கு பதிலாக தன்னுடைய டெல் கணினியில் பாகங்கள் எங்கெங்கிருந்தெல்லாம் வந்தது என்று கண்டுபிடிக்கச் சொன்னாராம். 400க்கும் மேற்பட்ட பாகங்கள், 30க்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து. மலேசியாவில் இருக்கும் சீன நிறுவனம், தாய்லாந்தில் இருக்கும் சீன-ஜப்பானிய நிறுவனம், சீனாவில் இருக்கும் சீன நிறுவனம், இப்படி, அப்படி என்று. (அதில் ஏதாவது பிரச்னை என்றால் நீங்கள் தொலைபேசியில் அழைப்பு விடுத்தால் அதை எடுப்பவர் பெங்களூரில் இருக்கும் இந்தியராக இருக்கலாம், அல்லது அமெரிக்காவிலேயே இருக்கும் அமெரிக்கராகவும் இருக்கலாம்!)
* பரிவுடனான உலகமயமாதல், புஷ், பிளேர் என்று பலதரப்பட்ட விஷயங்கள். ஃப்ரீட்மேன் பிளேர் ரசிகர் என்று சொன்னார். பிளேர்தான் சரியான கிச்சடியைக் கிண்டியிருக்கிறாராம். சோஷலிசம், சந்தையிசம் என்று சரியான பதத்தில் வந்துள்ளதாம். இந்தியாவின் மன்மோகன் சிங்குக்கும் இந்த கிச்சடிக்கான பதம் தெரிந்துள்ளதாம். அவரும் சரியான பாதையில்தான் செல்கிறாராம். புஷ்ஷுக்குத் தெரியவில்லையாம். ஒரே தீயல் வாசனை.
ஃப்ரீட்மேன் புஷ் கொள்கைகளை எதிர்ப்பவர். ஈராக் போரைத் தவிர.
புத்தகத்தைப் படித்தவர்கள் புத்தகத்தின் மீதான கருத்துகளைச் சொன்னால் நன்று.
பிற சுட்டிகள்:
ஃப்ரீட்மேன் - ஹார்ட் டாக் செவ்வி
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
5 hours ago
//அவர் சிறுவனாக இருக்கும்போது வீட்டில் பெற்றோர்கள் சொல்வார்களாம்: "சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"//
ReplyDeleteபத்ரி, உண்மையில் இது ஒரு கேலிச்சித்திரமாக வந்தது. இணையத்தில் பார்த்திருக்கிறேன்.
why not outsource homework also , well if they can outsource teaching by engaging teachers in india, this also should be possible.
ReplyDeleteசென்ற மாதம் ஜூரிக் பல்கலையில் நிகழ்த்திய உரையில் குடியரசுத் தலைவர் கலாம் The World Is Flat-க் குறிப்பிட்டுச் சிலாகித்திருந்தார்.
ReplyDelete//"சாப்பாட்டை ஒழுங்காகச் சாப்பிடு, மிச்சம் வைக்காதே. சீனா, இந்தியாவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் சாப்பாடு இல்லாமல் பட்டினி கிடக்கிறார்கள்." இவர் இப்பொழுது தன் குழந்தைகளிடம் சொல்கிறாராம்: "வீட்டுப்பாடத்தை ஒழுங்காகப் போடு, மிச்சம் வைக்காதே! சீனா, இந்தியாவில் பலர் பசியுடன், உன் வேலையைப் பிடுங்கத் தயாராக இருக்கிறார்கள்!"//
ReplyDeleteஃப்ரீட்மேன் பேட்டிகள் கொடுத்துக்கொண்டிருந்த புதிதில் இதே சொற்றொடரை உணர்ச்சி பொங்க நாலைந்து சேனல்களின் திரும்பத் திரும்ப ஒரேமாதிரி சொன்னதைக் கேட்க நேர்ந்தது.
ப்ரீட்மன் கட்டுரைகளைப் படித்திருக்கிறேன். நன்றாக இருந்ததாக எண்ணியிருக்கிறேன். ஆனால் அவரது புத்தகத்தைக் கிழித்திருந்த விமர்சனத்தைப் படித்தேன். சுவாரசியமாய் இருந்தது. புகழ்பெற்ற எழுத்தாளராய் இருந்தாலும் எப்படிச் சிலவற்றை அபத்தமாக எழுத முடியும் என்று உணர முடிந்தது.
ReplyDeleteடாம் ஃப்ரீட்மன் நாலைந்து நாட்களுக்கு முன் பெங்களூரிலிருந்து எழுதிய பத்தி செய்தித்தாளில் வந்தது. பிரான்ஸ் வாக்காளர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசியலமைப்புச் சட்டத்தை நிராகரித்ததை பின்னணியாக வைத்து "பிரஞ்சுக்காரர்கள் வாரம் 35 மணி நேரத்துக்கு மேல் வேலைசெய்யத் தயாராக இல்லை. இந்தியர்கள் ஒரு நாளைக்கு 35 மணி நேரம் வேலைசெய்யத் தயாராக இருக்கிறார்கள்" என்றபடி 'பழைய' ஐரோப்பாவையும் புது ஆசியாவையும் ஒப்பிட்டு எழுதியிருந்தார். அதையும், அ. மார்க்ஸ் உயிர்மையில் எழுதியிருந்த வேலைவாய்ப்பு பயிற்சி முகாம் குறுஞ்செய்தியையும் இணைத்து ஒரு பதிவு எழுதலாமென்றிருந்தது புத்தக விளையாட்டைக் குறித்து எழுதப்போய் தவறிவிட்டது.
ReplyDeleteWalk the Talk நிகழ்ச்சியிலும் Hard Talk நிகழ்ச்சியிலும் கூட பிரான்ஸை அடித்துத் தாக்கினார். "Hey, stop the world, we want to get down" என்கிறார்கள் ப்ரெஞ்ச். "Hey, stop the world, we want to get in" என்கிறார்கள் இந்தியர்கள்... "Walk the Talk"-இல்
ReplyDeleteHard Talk-இல் 12.5% வேலையில்லாத் திண்டாட்டம் இருக்கும் பிரான்ஸைத் திட்டித் தீர்த்தார். "Hey, don't come to me crying, when things go wrong..."
ஃப்ரீட்மனுக்கு பிரான்ஸின் மீது இருக்கும் கோபம் ஈராக் போரும் சார்ந்தது என நினைக்கிறேன்.
ரொம்ப உணர்ச்சி வசப்படுகிறார். பல அபத்தமான உதாரணங்களைக் காட்டுகிறார். இவர் முழுதாக உலகமயமாதலைப் புரிந்துகொள்ளும் முன் ஒரு புத்தகத்தை எழுதிவிடவேண்டும் என்ற ஆர்வத்தை மட்டும் காட்டியிருக்கிறார்.
Imperfections in Friedman's flat world by Shashi Tharoor (http://www.hindu.com/mag/2005/06/05/stories/2005060500160300.htm)
ReplyDelete*THREE BILLION NEW CAPITALISTS*
ReplyDeletecovers with more depth.
Badri,
ReplyDeleteFriedman is a known right wing columnist. Just recently he started bashing Bush otherwise he is one of the few right wing columnists with NYT.
- MK
I know nothing about economics. But that was a very interesting book.
ReplyDeleteI usually read almost every column written by him in the nytimes. I like most of them.
In our college we've named our professor "Freidman" because he is a bangalore fan.