Friday, June 24, 2005

மும்பை பார் நடனம் மீதான தடை

ஆளுனர் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவில்லை...

அவ்வளவாக முக்கியமில்லாத விஷயத்தில் முக்கியமான ஒரு விஷயம் நடந்தேறியுள்ளது. சில மாதங்களுக்கு முன்னர், திடீரென, தமது மாநிலத்தை நல்லொழுக்கம் மிக்கதாக மாற்ற விரும்பிய மஹாராஷ்டிர அரசு ஓர் அவசரச் சட்டத்தை இயற்றியது. அதன்படி மஹாராஷ்டிரா மாநிலத்தில், மும்பை மாநகரம் தவிரப் பிற இடங்களில் நாட்டியமாடும் வசதியுடன் கூடிய மதுபான பார்கள் இழுத்து மூடப்படும் என்று அறிவித்தது. விரைவில் மும்பையிலும் இந்தத் தடையை அமல்படுத்த இருப்பதாகவும் அறிவித்தது.

இந்த மதுபான பார்களில் நாட்டிய மங்கைகள் வேலை செய்கிறார்கள். இங்கு குடிக்கச் செல்லும் ஆண்களுக்குத் துணையாக நாட்டியமாடுவது இவர்கள் வேலை. அதன்மூலம் பணம் சம்பாதிக்கிறார்கள். இந்தத் தடையை ஆதரித்துச் சிலரும், எதிர்த்துச் சிலரும் பேசி வருகிறார்கள்.

இந்தப் பதிவின் நோக்கம் அதை அலசுவதல்ல.

எதற்கெடுத்தாலும் சம்பந்தா சம்பந்தமில்லாமல் மாநில மத்திய அரசுகள் அவசரச் சட்டத்தை இயற்றுவதைப் பற்றியும், அதற்கு ஆளுனர்களும் குடியரசுத் தலைவரும் ஒப்புதல் அளிப்பதைப் பற்றியும்தான் இந்தப் பதிவு. மேற்படி மஹாராஷ்டிர அரசின் அவசரச் சட்டத்தில் கையெழுத்திட மறுத்த ஆளுநர் (கர்நாடகா முந்நாள் முதல்வர்) எஸ்.எம்.கிருஷ்ணா, "இது அவ்வளவு அவசரமான விஷயம் இல்லை. ஜூலை 11ல் கூடும் சட்டமன்றம் இதை விவாதித்து, விரும்பினால் சட்டமாக்கலாம்." என்று சொல்லியுள்ளார். இத்தனைக்கும் கிருஷ்ணா காங்கிரஸ்காரர், மஹாராஷ்டிராவில் நடப்பது காங்கிரஸ் அரசு.

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஒரு வாரத்துக்கு முன்னர் ஆளுநர்களுடன் உரையாடும்போது சொன்ன அறிவுரை:
You have to decide whether you rise to be a first citizen or remain caged in the confines of your political or any other ancestry.
அதை உடனே செய்து காட்டியுள்ளார் எஸ்.எம்.கிருஷ்ணா.

இப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம். சில வாரங்களுக்கு முன் இரவோடு இரவாக மத்திய கேபினட் கூடி பிஹார் சட்டமன்றத்தைக் கலைக்கச் சொல்லி, குடியரசுத் தலைவரின் உத்தரவைக் கேட்டது. அப்பொழுது அவர் ரஷ்யாவில் இருந்தார். இரவு முழுதும் விழித்திருந்து ஃபேக்ஸ் அனுப்பி அதில் கையெழுத்திட்டார். இந்த அவசரம் தேவையற்றது. 'நான் இந்தியா திரும்பி வரும் வரையில் காத்திருங்கள்' என்று அவர் சொல்லியிருக்கலாம். பிஹார் சட்டமன்றக் கலைப்பு முழுக்க முழுக்க அரசியல் காரணங்களால் செய்யப்பட்டது. அதுபற்றிய விவாதம் எங்கும் நடக்கவில்லை.

அதே போல மத்திய அரசு இயற்றும் பட்ஜெட்டிலிருந்து, பல்வேறு சட்டங்கள், அவசரச் சட்டங்கள் அனைத்தையும் - தேவைப்பட்டால் - குடியரசுத் தலைவர் கேள்விக்குள்ளாக்க வேண்டும். முக்கியமாக, அவசரச் சட்டம் தேவையில்லை; நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ விவாதம் தேவை என்ற நிலையில் ஆளுநர்களும், குடியரசுத் தலைவரும் அவசரச் சட்டத்தில் கையெழுத்திடவே கூடாது. எஸ்.எம்.கிருஷ்ணாவைப் பின்பற்றி பிற ஆளுநர்களும் - ஏன் அப்துல் கலாமும் கூட - நடந்தால் நல்லது.

11 comments:

  1. //இப்படி அறிவுரை சொன்ன அப்துல் கலாம், தாமே ஓர் உதாரணத்தைச் செய்து காட்டியிருக்கலாம்.//
    நிஜம்தான்.. :-(

    ReplyDelete
  2. அவசரச் சட்டங்களை கட்டுப்படுத்த ஒரு அவசரச் சட்டத்தில் கலாம் கையெழுத்திடலாம்.

    ReplyDelete
  3. ஓரு அரசைக் கலைக்கும் விடயத்தில் ஒரு ஆளுநர் தன்னிச்சையாக செயல் படலாம்., எல்லாம் சரியாக நடந்தால்கூட சட்டத்திற்கு புரம்பான ஒன்றை கற்பித்துக் கொண்டு., (உ.ம். வீரப்பனை பிடிக்கமுடியவில்லை என்று கூறிக் கூட) ஒரு அரசைக் கலைக்க ஆளுநர் ஜானாதிபதிக்கு பரிந்துறை அனுப்பலாம் (நடைமுறையில் நமெக்கெல்லாம் அறிவு விழித்துக் கொண்டிருப்பதால்., அது நடப்பதில்லை)., தவிர கலைப்பிற்குப் பின்னான நிகழ்வுகளைக் (அதாவது போர., வர்ற போருந்துகளைச் சொக்கப் பானையாக்கி பரவசப் படுவது போன்றவை) கணக்கில் கொண்டும் அவசர முடிவுகள் எடுக்கப்படும். பீகாரில் குதிரை பேரத்தையொட்டியே அது அவசரமாகச் செய்யப் பட்டது. ஆனால் பார் ஒழிப்பு போன்றவற்றை சட்டமன்றத்தில் விவாதித்து முடிவு எடுப்பதே (பாதிப்புள்ளாகுபவர்களைப் பற்றி தெரிந்து கொண்டு., தேவையானால் மாற்று ஏற்பாடு செய்யவும்., (இந்தவிடயத்தில் அல்ல). சரியானது. எனவே அதுவும், இதுவும் ஒன்றல்ல.

    ReplyDelete
  4. அப்பிடிப்போடு: நீங்கள் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. குதிரைப்பேரம், கழுதைப்பேரம் - எதுவாக இருந்தாலும் அதனால் உயிர்ச்சேதம் எதுவும் நி்கழப்போவதில்லை. இங்கு பாஜக எதிரி என்பதால் செய்த காரியம் நியாயமாகிவிடாது. கோவா, ஜார்க்கண்ட், பிஹார் ஆகிய மூன்று இடங்களிலும் காங்கிரஸ் கவர்னர்கள் செய்தது சிறிதும் நியாயமல்ல. அதற்குச் சப்பைக்கட்டு கட்ட வருவது அபத்தம்.

    ஆளுநருக்கான அதிகாரங்கள் எனக்குத் தெரியும். ஆனால் அதை எப்படிப் பயன்படுத்துவது, சொந்தக் கட்சியின் நலன்களுக்காகப் பயன்படுத்துவதா இல்லை அரசியலமைப்புச் சட்டம் எந்த எண்ணத்தில் அந்த அதிகாரங்களைக் கொடுத்ததோ அந்த நோக்கம் கெடாமல் இருக்கிறதா என்பதுதான் முக்கியம்.

    ReplyDelete
  5. திரு கிருஷ்ணா அவர்கள் தாமே இந்த முடிவிற்கு வரவில்லை. இதிலும் அரசியல் உண்டு. இச்சட்டத்தை முன்மொழிந்தது தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் பாடில் . பார் மாதர் சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார். இன்றே மற்றொரு (மின் வினியோகம்)அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறார்.

    அன்புடன்,
    மணியன்

    ReplyDelete
  6. > சோனியாவை பார்த்து முறையிட்டதாலும் தேசியவாத காங்கிரஸின் பிடியை எதிர்க்கவும் கவர்னர் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்.

    - SM Krishna thirundhitaaronu nenachen.. hehehe..

    ReplyDelete
  7. மணியன்: தேசியவாத காங்கிரஸ் தன்னிச்சையாக ஒரு அவசரச் சட்டத்தைக் கொண்டுவரமுடியாது. கேபினெட் அனுமதியுடன், முதல்வர் அனுமதியுடன்தான் செய்யமுடியும்.

    நீங்கள் குறிப்பிட்ட electricity ordinance பற்றி விவாதம் தேவையில்லை என்று தோன்றியதால்தான் தான் அதனை ஏற்றுக்கொண்டேன் என்று கிருஷ்ணா சொல்லியிருக்கிறார்.

    மேலும் அந்த அவசரச்சட்டத்தை யாரும் எதிர்க்கவில்லை.

    ஆனால் நாட்டியப் பெண்கள் விவகாரமே வேறு.

    உண்மையில் சட்டமன்றத்தில் இந்த விஷயம் வரும்போது பாஜக, சிவசேனை என்று எல்லோருமே சேர்ந்து தடையைச் சட்டமாக்குவார்கள் என்று தோன்றுகிறது!

    இது தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் இடையேயான பிரச்னை என்று நான் பார்க்கவில்லை. எனினும் இந்த விவகாரம் எங்கே போகிறது என்று பார்ப்போம்...

    ReplyDelete
  8. பத்ரி., நான் பீகார் அரசு கலைக்கப் பட்டது சரியென வாதிடவில்லை. ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பை பீகாரை உதாரணமாகக் கொண்டே கூறினேன். தமிழகத்தில் ஒரு அரசை கலைக்கும் பரிந்துறையை ஆளுநர் நள்ளிரவில் கையெழுத்திடுகிறார் என வைத்துக் கொள்வோம்., ஏன் அவ்வாரு செய்கிறார்?., அவர் நிதானமாக அடுத்த நாள் பகலில் செய்யலாமே?., கலவரம் மூளும் அபாயம்., பொதுமக்கள் நலன் ஆகியவையும் கணக்கில் எடுத்துக் கொண்டே அவசரமாக கையெழுத்திடுகிறார்கள். எப்போதும் ஆட்சிக்கலைப்பென்பதில் பாதிக்கப் பட்ட கட்சியொன்று இருக்கும்தான். என்னைப் பொருத்தவரை ஆட்சிக் கலைப்பென்பதையே எக்கட்சியாய் இருந்தாலும் எதிர்க்கிறேன். ஆனால் ஒரு மாநிலத்தின் ஆட்சிக் கலைப்பும்., பார் ஒழிப்பும் ஒரே பார்வையில் வைக்கத்தக்கவை அல்ல. மாரிலத்தின் அவசரமில்லாத உள் விவகார முடிவுகள் சட்ட மன்றத்தில் வாதிடப்பட்டே எடுக்கப்பட வேண்டும். எதற்கும் நான் சப்பைக் கட்டுகட்டவில்லை. அதற்கான அவசியமும் எனக்கில்லை.

    ReplyDelete
  9. I am surprised by the following news:

    http://64.233.179.104/search?q=cache:wNi6kfkPPpYJ:www.theshillongtimes.com/national.html+Presidents+office+on+Gujarat+issue&hl=en

    President’s Office refuses to send Narayanan’s documents
    Godhra probe

    Ahmedabad: Rashtrapati Bhavan has refused to send documents to Godhra Inquiry Commission sought by the defence counsel in connection with the then President K R Narayanan's instructions to former Prime Minister Atal Bihari Vajpayee to tackle the Godhra riots effectively, the Commission was informed here on Friday.The Nanavati-Shah riot probe panel received a reply from the President's Office stating that "the letters sought by the defence counsel cannot be sent on grounds of privilege."

    In the reply the President's Secretary has refused to comply with this request and sought privlege under section 123 of evidence Act and Article 74 (2) of the Constitution. The documents which Sinha had asked includes letters written by Narayanan when he was the President to Vajpayee on "the steps needed to be taken to contol the post-Godhra riots and the urgent need to deploy the Army." Narayanan had spoken about the role of the Gujarat Government, the then NDA Government and about his letters written to Vajpayee in an interview to a newspaper some months back.

    In this situation, i feel whatever Dr.Kalam has mentioned in the Governors meeting does not go very well.

    Ofcourse, I assume that Dr. Kalam has the authority to direct his secretary's to provide the required documents.

    ReplyDelete
  10. கல்பனா ஷர்மா இன்றைய தி ஹிந்துவில் இதைப்பற்றி கருத்துப்பத்தி ஒன்று எழுதியிருக்கிறார். அதற்கான சுட்டி கிடைக்கவில்லை.

    ====

    பாலாஜி-பாரி: அப்துல் கலாம் "privlege under section 123 of evidence Act and Article 74 (2) of the Constitution" க்குப் பின்னால் ஒளிந்துகொள்ளக் கூடாது. தவறான செய்கை. கே.நாராயணன் என்ன சொன்னார் என்பதைத் தெரிந்துகொள்வது அவசியம். கோத்ரா வழக்குக்கு முக்கியமான சில விஷயங்கள் அதிலிருந்து கிடைக்கலாம்.

    ReplyDelete
  11. கல்பனா ஷர்மா கட்டுரையின் சுட்டி இதோ.

    ReplyDelete