Wednesday, June 22, 2005

இந்தியா டுடே தமிழில் வலைப்பதிவுகள் பற்றி

தமிழ் வலைப்பதிவர்கள் யாரும் இந்தியா டுடே தமிழ்ப்பதிப்பு வாங்குவதில்லை போலத் தெரிகிறது:-) இந்த வாரம் தமிழ் வலைப்பதிவுகள் பற்றிய நான்கு பக்கக் கட்டுரை வந்துள்ளது.

பக்கங்கள் ஒன்று | இரண்டு | மூன்று | நான்கு

பல தகவல் பிழைகள். இலக்கணப் பிழைகளும் உண்டு. மனுஷ்யபுத்திரன், பத்ரி சேஷாத்ரி, பி.கே.சிவகுமார், ரஜினி ராம்கி ஆகியோரின் புகைப்படங்களும் மேற்கோள்களும், மாலன், தேசிகன், அருணா ஸ்ரீநிவாசன் ஆகியோரிடமிருந்து மேற்கோள்களும் உள்ளன. தமிழ்மணம் சுட்டி உள்ளது.

===

தமிழ் வலைப்பதிவுகள் பற்றி பிற plugs

பா.ராகவன் கதை, வசனத்தில் வரும் கெட்டிமேளம் தொலைக்காட்சித் தொடரில், தமிழ் வலைப்பதிவுகள் பற்றி அவ்வப்போது வந்துகொண்டே இருக்கிறது. இணைய மையம் தொடர்பான காட்சிகளில் வலைப்பதிவுகள் பற்றி, தமிழ்மணம் பற்றி, தமிழ் ஓப்பன் சோர்ஸ் மென்பொருள்கள் பற்றி சில வார்த்தைகள் என்று அவ்வப்போது வந்துகொண்டிருக்கிறன. இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி அலுவலகத்துக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றனவாம் (எப்படி வலைப்பதிவுகளைத் தமிழில் செய்வது என்பது பற்றிய கேள்விகளுடன்).

26 comments:

  1. நான் ஏற்கனவே படித்து விட்டேன்..வாழ்த்துக்கள்!

    -ஜோ

    ReplyDelete
  2. தகவலுக்கு நன்றி பத்ரி. சீரியலில் தமிழ் வலைப்பதிவுகள் பற்றி வர ஆரம்பித்துவிட்டது இல்லையா.. இனி, சூடு பிடித்துவிடும் :-) அதுசரி, தமிழ் இந்தியா டுடே, சான்பிரான்ஸிஸ்கோ / San Jose பக்கம் எங்கே கிடைக்கும் என்று யாராவது சொல்ல முடியுமா?தகவல் சொல்பவர்களுக்கு முன்கூட்டியே நன்றி. :-)

    ReplyDelete
  3. சென்ற ஞாயிறுதான் அந்த கட்டுரையினைப் படித்தேன். அதை ஒரு போட்டோ எடுத்து நாளை போடலாம் என்று எண்ணியிருந்தேன் நீங்கள் இன்று அதைப் பற்றி எழுதிவிட்டீர்கள்.

    (நவனோட பெயர் யவன் என்று வந்திருந்தது பார்த்தீங்களா :)), நல்லகாலம் யமன் னு போடலயே ;) )

    ReplyDelete
  4. நிறைய பிழைகள் இருந்தாலும் (முக்கியமாக நாகப்பட்டினத்திற்கு பதிலாக நாகர்கோயில் என்று குறிப்பிட்டிருந்தது) இந்தியா டுடேவின் முயற்சி வரவேற்கத்தக்கதே. வலைப்பூக்கள் வெளிச்சத்துக்கு வரும் நேரத்தில் பிளாக் பிதாமகர்கள் இந்தியாவில் இல்லாததுதான் எனக்கு வருத்தம்.

    ReplyDelete
  5. இப்போதுதான் வாங்கிப் படித்தேன். ஒரு சில தகவல் பிழைகளைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால் நன்றாகத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள்.

    ReplyDelete
  6. //முக்கியமாக நாகப்பட்டினத்திற்கு பதிலாக நாகர்கோயில் என்று குறிப்பிட்டிருந்தது//
    ஓ!நான் கூட ராம்கி நம்மூர் வரைக்கும் போயிட்டாரேன்னு நினைச்சுகிடேன்.

    ReplyDelete
  7. கெட்டிமேளம் தொடரின்ன் ஒரு நாள் காட்சியில் வெங்கட் அவர்களின் டொமஸ்டிகேடட் ஆனியன், பி.கே.சிவக்குமார் அவர்களின் வலைபதிவு இன்னும் ஓரிரண்டு வலைபதிவுகளின் ஹோம்பேஜ்கள் காட்சியின் பின்னணியில் காட்டப்பட்டதைப் பார்த்தேன்.

    ReplyDelete
  8. //இதைத் தொடர்ந்து தொலைக்காட்சி அலுவலகத்துக்கு சில தொலைபேசி அழைப்புகள் வருகின்றனவாம் (எப்படி வலைப்பதிவுகளைத் தமிழில் செய்வது என்பது பற்றிய கேள்விகளுடன்). //

    நல்ல ஒரு தொடக்கமாக தெரிகிறது பத்ரி. அழுது மூக்கை மட்டும் சீரியல்களால் சிந்தி கொண்டிருக்காமல் இப்படி பயனுள்ள தகவல்களும் மக்களுக்கு சொன்னால் பெருமகிழ்ச்சியே. ஹேப்பி.

    ReplyDelete
  9. இதுவரை வலைப்பதிவுகளைப் பற்றி அச்சு இதழில் வந்த (வந்ததா?) கட்டுரைகள் எதையும்விட நன்றாக வந்திருக்கிறது. கட்டுரை ஆசிரியர் சதாசிவம் பாராட்டுக்குரியவர். பத்ரி எழுதியதைப் பார்த்து பத்திரிகை வாங்கிப் பார்த்தேன். குற்றம் கண்டுபிடித்தே பேர்வாங்கும் பழக்கதோஷத்தால் எனக்கு வந்த கருத்துக்கள்:
    1. ஒரு சில வலைப்பதிவுகளின் திரைக்காட்சியை (நிழற்படத்தில் கலங்கலாகத் தெரிவது போதாது) தெளிவாக படமாக கொடுத்திருந்தால், இதுவரை இணையத்தில் விகடன்/குமுதம் போன்ற நிறுவனங்களின் வலைப்பக்கத்தை மட்டுமே பார்த்திருப்பவர்களுக்கு ஒரு தனிமனித வலைப்பதிவு பார்க்க எப்படி இருக்கும் என்று தெரிய வாய்ப்பு ஏற்படுத்தியிருக்கலாம். (கூடவே தமிழ்மணம் வலைப்பக்கத்தின் - 'பட்டியல்' & 'மன்றம்' புதியவர்களுக்கு உந்துதலாக இருந்திருக்கலாம் - திரைக்காட்சியும் காட்டப்பட்டிருக்கலாம் என்ற சுயநலமும் சேர்த்துக்கொள்ளவும்)
    2. இதழியல்/நூற்பதிப்பு/இலக்கியம் வட்டத்தில் ஏற்கனவே அறிமுகமானவர்கள் நால்வர் முன்னிறுத்தப்பட்டிருப்பதோடு, வலைப்பதிவுகள்மூலமாக மட்டுமே எழுதவந்தவர்கள், துறை சார் பதிவுகள் எழுதுபவர்கள் யாரேனும் ஒருவரையாவது முன்னிறுத்தியிருக்கலாம்.
    3. தகவல் பிழைகளை யாரேனும் ஒரு வலைப்பதிவருடன் கலந்து முன்பார்வையிடச்செய்து களைந்து வெளியிட்டிருக்கலாம். உதாரணமாக, தனியாக பெட்டிச்செய்தியில், '...பப்ளிஷ் என்ற ஐகானை அழுத்தினால் போதும். உடனே அது இணையம் ஏறிவிடும். தமிழ்ஓவியம், தமிழ்மணம்.ப்லாக்ஸ்பாட்.காம் போன்ற வலைப்பதிவிற்கான பொது இணையத்தளங்களில் வெளியாகும் பட்டியலில் உங்கள் வலைப்பதிவு இடம்பெறும்.' -இதில் எத்தனை ஓட்டைகள் என்று எண்ணிச் சொல்பவர்களுக்கு இந்தியா டுடே தனியாக பரிசு கொடுக்க நான் சிபாரிசு செய்கிறேன்.
    4. இன்னொன்று '...இணையத்தில் வலைப்பதிவு ஆரம்பிப்பது வெகுசுலபம்.www.blogspot.com போன்ற ஒரு தளத்துக்குப் போய் உங்கள் வலைப்பதிவைத் துவங்கலாம்.இன்டர்நெட்டில் தமிழ் எழுத்துருக்கள் முதல் விலாவாரியாகத் தெரிந்துவைத்திருக்கும் ஒரு நண்பரிடம் ஆலோசனை கேட்டால் அவரே உங்களுக்கு ஒரு வலைத்தளத்தை ஆரம்பித்துக் கொடுத்துவிடுவார்.'

    அது யாருங்க அந்த நண்பர்?:-))

    இருந்தும், நல்ல துவக்கம்.

    அன்புடன்,
    -காசி

    ReplyDelete
  10. சதாசிவத்துடன் சுமார் இரண்டு மணிநேரம் பேசினேன். பல வலைப்பதிவர்களின் தொலைபேசி எண்களையும் கொடுத்தேன். சென்னை ஆசாமிகளுடைய தகவலை மட்டும்தான் கொடுத்தேன்.

    ஆனால் எழுத்தில்/அச்சில் என்ன வரும் என்று சொல்வது கடினமாக உள்ளது.

    ReplyDelete
  11. நன்றி பத்ரி! இந்தியா டுடே வாங்கியுள்ளேன். தங்களது இந்தப் பதிவால் இந்தியா டுடேயில் தமிழில் வலைப் பதிவுகள் பற்றிய கட்டுரையையும், அதன் அடுத்த பக்கத்தில் 'திருவாசகத்திற்கு உருகியவர்கள்' எனும் தலைப்பில் இசைஞானி இளையராஜாவின் திருவாசகம் பற்றிய கட்டுரையையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

    ReplyDelete
  12. Woww...Gr8 Stuff, Kudos to everybody mentioned in the article!

    ReplyDelete
  13. வலைப்பதிவுகள் == சென்னை ??

    சென்னையில் இல்லாதவர்களில் சிவக்குமார் பெயர் மட்டும்தான் வருகிறது. மெரினாவில் கூடுகிறார்கள் சரி, ஆனால் நியூஜெர்ஸி, சிங்கப்பூர் இங்கெல்லாம் கூடச் சந்திப்புகள் நடக்கின்றனவே?

    முரசு அஞ்சல் நெடுமாற்ன் வலைப்பதிவில் என்ன எழுதினார்? இல்லை தமிழ், கணினி என்றால் அதில் இந்தப் பெயர் கட்டாயம் வந்தாகவேண்டும் என்ற விதியா?

    மொத்தத்தில் வலைப்பதிவுகளைப் படித்துவிட்டு எழுதியதைப் போலத் தெரியவில்லை, கேள்விப்பட்டுவிட்டு எழுதியிருக்க வேண்டும். ஏனென்றால் இந்த புதிய பேஷன் வலைப்பதிவுக்கும் பத்துவருஷமாக இருக்கும் வலைத்தளத்திற்கும் என்ன வித்தியாசம் என்பதைப் பற்றிக்கூட குறைந்தபட்சம் எழுதவில்லை.

    காசி - இதழியல்காரர்களைத் தவிர வேறென்ன வரும் என்று எதிர்பார்த்தீர்கள்? :)

    ReplyDelete
  14. இந்தியா டுடே-வில் வந்தது வரவேற்கப்படவேண்டியது. :-(
    மற்றபடி, நான் வாயை மூடிக்கொண்டிருக்கவேண்டிய இன்னொரு விஷயமெனக் கருதுகிறேன். :-(
    இகாரஸ் எழுதியிருந்தால் ஒரு நல்ல கட்டுரையாவது கிடைத்திருக்கும். :-(

    ReplyDelete
  15. மாலன் வலைப்பதிவினை மூடிவிட்டார், தற்போது பதிவதில்லை.மிகப் பெரும்பாலான வலைப்பதிவாளர்கள் இந்தியாவிற்கும், இலங்கைக்கும் வெளியே இருக்கிறார்கள்.ஈழத்தமிழர் பலர் வலைப்பதிவுகளை ஈழப்பிரச்சினைகளை, ஈழத்து கலாச்சார, இலக்கிய போக்குகளைப் பற்றி எழுத பயன்படுத்துகின்றனர். இது ஒரு முக்கியமான வரவேற்கப்பட வேண்டிய போக்கு. வலைப்பதிவாளர்களில் குறும்பட இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், மாணவர்கள், ஆய்வாளர்கள் எனப் பலதுறைகளைச் சார்ந்தவர்கள் இருப்பதால் வலைப்பதிவுகளில் விவாதிக்கப்படும் பல விஷயங்கள் தமிழின் அச்சு ஊடகங்களால் பேசப்படாதவை.வலைப்பதிவுகள் மூலம் உரைகள், புகைப்படங்கள் போன்றவையும் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

    4 பக்க கட்டுரையில் இது போன்ற விபரங்களைக் கூட எதிர்பார்ப்பது வீண் போலும்.

    ReplyDelete
  16. இந்தியா டுடே பக்கங்களைப் படிக்கத் தந்தமைக்கு நன்றி பத்ரி!

    ReplyDelete
  17. ஒரு நாள் காட்சியில் வெங்கட் அவர்களின் டொமஸ்டிகேடட் ஆனியன், பி.கே.சிவக்குமார் அவர்களின் வலைபதிவு இன்னும் ஓரிரண்டு வலைபதிவுகளின் ஹோம்பேஜ்கள் காட்சியின் பின்னணியில் காட்டப்பட்டதைப் பார்த்தேன்.

    அது தொடரில் எந்த சந்தர்ப்பத்தில் காட்டப்பட்டதோ. யாரவது தப்பித்தவறி பி.கே.சிவகுமாரின் வலைப்பதிவினையும், பின்னூட்டங்களையும், இன்னும் சில வலைப்பதிவுகளையும் படித்தால் வலைப்பதிவுகளுடன் ஒப்பிடுகையில் மெகா சீரியல்களே பரவாயில்லை என்ற முடிவிற்கு வந்துவிடுவார்கள்.

    ReplyDelete
  18. சுவாரசியமாக இருந்தது.

    அறுசுவை பாபுவின் இயற்பெயர் சுவாமிநாதன் போலும்.

    சிவக்குமார் சுனாமி நிதிக்காக வேண்டுகோள் விடுத்து, ரூபாய் 2.6 லட்சம் சேர்ந்து, அதை ரஜினி ராம்கி பொறுப்பெடுத்து, சீப்பு, சோப்பு, பாய், போர்வை இதெல்லாம் கொண்டுப்போய் நாகப்பட்டிணத்தில் கொடுத்தாரா?

    ReplyDelete
  19. Congratulations to everyone concerned

    ReplyDelete
  20. பாபு,

    //அந்த சமயத்தில் நான் எழுதிய நிறையப் பக்கங்கள் இன்னும் என் கணினிக்குள்ளேயே பத்திரமாய் உறங்குகின்றன. //

    அவைகளை கட்டாயமாய் (முடிக்கவிட்டாலும்) பதியுங்கள். முக்கிய ஆவணமாய் இருக்கும். மேலும் இன்று யாரும் மீட்பு பணி குறித்து எழுதாததால் கேட்கிறேன். நிச்சயம் இன்றும் பல பிரச்சனைகள் இருக்கும். அது குறித்து(தற்போதய நிலை குறித்து) பதிய முடியுமா? பேரழிவு காலத்தில் தீவிரமாய் அக்கரை காட்டிவிட்டு, அந்த மனசமாதானத்தில் பிந்தய பிரச்சனைகளை மறந்துவிட்டதாய் தோன்றுகிரது. இன்று ட்சுனாமி பேரழிவு பிரச்சனை குறித்து யாருமே பேசுவதில்லை. நான் இதில் வெட்டி. எங்கேயோ இருக்கிறேன். பேச எனக்கு தகுதியில்லை என்றாலும் ஒரு வேண்டுகோளாய் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி உங்களிடம் முன்வைக்கிறேன். குற்றம் சொல்வதாய் தவறாய் எடுக்காமல் எழுதுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

    ReplyDelete
  21. இன்னும் அதிகப்பேரை வலைப்பதிவுக்கு வரவழைக்க இம் மாதிரி அச்சு ஊடகங்களின் கட்டுரைகள் உதவும் என்பதில் சந்தேகம் இல்லை.
    வாழ்த்துகள்.

    ( ராம்கி, அவங்க தலிவரை எங்க போனாலும் விடறதே இல்லை போலருக்கு..:-). ம்..நடக்கட்டும். :-) }

    ReplyDelete
  22. பாபு பதிலுக்கு நன்றி. கட்டாயம் எழுதுங்கள்!

    ReplyDelete
  23. //சிவக்குமார் சுனாமி நிதிக்காக வேண்டுகோள் விடுத்து, ரூபாய் 2.6 லட்சம் சேர்ந்து, அதை ரஜினி ராம்கி பொறுப்பெடுத்து, சீப்பு, சோப்பு, பாய், போர்வை இதெல்லாம் கொண்டுப்போய் நாகப்பட்டிணத்தில் கொடுத்தாரா? //

    ரோ.வ,

    நாலு பக்க மேட்டரை நாலு வரியில் எழுதும்போது இப்படித்தான் சுருங்கிவிடுகிறது. இடப்பற்றாக்குறை. நல்லவேளை இணையத்தில் சுனாமி சம்பந்தப்பட்ட எல்லா விஷயத்தை பற்றியும் நாம் எழுதிவிட்டோம் என்று நினைக்கிறேன்.

    //ராம்கி, அவங்க தலிவரை எங்க போனாலும் விடறதே இல்லை போலருக்கு..:-). ம்..நடக்கட்டும்//


    மூக்ஸ்,

    எல்லா போஸ்டிங்கையும் ஒரு தரம் பார்த்துட்டு அந்த போஸ்டிங்தான் போட்டோகிராபருக்கு பிடிச்சிருந்தது. நான் எங்க 'அவரை' தூக்கிட்டு போறது... 'அவரு'தான் என்னை தூக்கிட்டு போறாரு!

    ReplyDelete
  24. //நவனோட பெயர் யவன் என்று வந்திருந்தது பார்த்தீங்களா :)), நல்லகாலம் யமன் னு போடலயே ;)//

    சந்தோஷ்.. அந்த யமன் நான் இல்லை. இவர் தான் அவர்

    ReplyDelete
  25. சென்னையில் 500க்கும் மேற்பட்ட தமிழ் வலைப் பதிவர்கள் அடிக்கடி சந்தித்துக் கொள்கிறார்கள் என்ற விபரம் அறிந்தேன். நானும் ஒரு தமிழ் வலை பதிவர் தான். எங்கே கூடுகிறார்கள்? எப்படி அவர்களை சந்திப்பது போன்ற விபரங்களை அறிந்தவர்கள் தர முடியுமா? உதவியாக இருக்கும்.
    குலசை சுல்தான்.

    ReplyDelete