புத்தக வெளியீடுகளுக்குப் பிறகு 'புனை கதை' என்ற அமர்வு நிகழ்ந்தது. நீல.பத்மனாபன் தலைமையில், எஸ்.ராமகிருஷ்ணன் தமிழில் நாவல்கள் பற்றியும், ரெ.கார்த்திகேசு தமிழ் சிறுகதைகள் எங்கு செல்லப்போகின்றன என்பது பற்றியும், பா.ராகவன் தமிழில் கட்டுரை இலக்கியம் பற்றியும் பேசினார்.
இந்த அமர்வுக்கு 'புனை கதை' என்று ஏன் பெயர் வந்தது என்று தெரியவில்லை. எஸ்.ராமகிருஷ்ணன் பேசுகையில் தமிழில் பல சிறுகதை எழுத்தாளர்களும், சிறுகதைக்கான களங்களும் இருந்தாலும், நாவல் என்று பார்க்கையில் இந்தியாவில் உள்ள மற்ற மொழிகளுக்கு முன்பாகவே தமிழ் போட்டிபோட்டு நிற்கமுடிவதில்லை, உலக மொழிகளைப் பற்றிப் பார்க்கையில், வெகுவாகப் பின்தங்கியுள்ளது என்றார். ஆனால் கடந்த இரண்டு வருடங்களாக இந்திஅ நிலை மாறுவதற்கான வாய்ப்புகள் தெரிவதாகச் சொன்னார்.
ராகவன் கட்டுரை இலக்கியம் பற்றிப் பேசும்போது மூன்று வகைகள் கண்ணுக்குத் தெரிவதாகவும், ஒன்று வெகுஜன இதழ்களில் வருபவை, இரண்டாவது சிற்றிதழ்களில் வருபவை, மூன்றாவது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகள் என்றார். ராகவனது முழுக் கட்டுரையும் ராயர்காபிகிளப்பிலும், அவரது வலைப்பதிவிலும் வெளியாகும்.
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
2 hours ago
No comments:
Post a Comment