முதலில் பேரா.இன்குலாப் தலைமையில் தமிழ் எழுத்துலகம் எந்த திசைகளில் போகின்றது என்று பேரா.சுதந்திரமுத்து, பேரா.த.சுமதி ஆகியோர் பேசினர்.
அதன் பின்னர் நான்கு புத்தகங்கள் வெளியிடப்பட்டன.
இந்திரா பார்த்தசாரதி எழுதிய 'கிருஷ்ணா கிருஷ்ணா' என்ற நாவலை அசோகமித்திரன் வெளியிட்டுப் பேசுவதாக இருந்தது. அவரால் வரமுடியாமற் போகவே, இரா.முருகன் நாவலை வெளியிட கலைஞன் பதிப்பகத்தின் மாசிலாமணி பெற்றுக்கொண்டார். இரா.முருகன் புத்தகத்தைப் பற்றிப் பேசியது ராயர்காபிகிளப்பில் வெளியாகும்.
ரெ.கார்த்திகேசுவின் 'ஊசியிலை மரங்கள்' என்னும் சிறுகதைத் தொகுப்பை, மாலன் வெளியிட, எஸ்.பொ பெற்றுக் கொண்டார். பின்னர் மாலன் புத்தகத்தைப் பற்றிப் பேசுகையில் தமிழகத்துக்கு வெளியில் இருந்து தமிழில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் என்று குறிப்பிட்டார்.
பழமலய் எழுதிய 'பாம்புகள்' என்னும் புத்தகத்தை பேரா.அ.மார்க்ஸ் வெளியிட, அமரந்தா பெற்றுக்கொண்டார். மார்க்ஸ் பேசுகையில் குத்துவிளக்கு ஏற்றி இலக்கியவிழா கொண்டாடுவது சரியல்ல, அதற்கு பதில், கலகமாக, யுகபாரதியின் 'மன்மத ராசா' பாட்டைப் போட்டு துவங்கியிருக்கலாம் என்றார்.
'மன்மத ராசா' புகழ் யுகபாரதி எழுதிய 'காதல் பிசாசே' என்னும் பழந்தமிழ் பாடல்களில் காதல் பற்றிய கட்டுரைத் தொகுப்பை ஈரோடு தமிழன்பன் வெளியிட, வெங்கட் சாமிநாதன் பெற்றுக் கொண்டார்.
No comments:
Post a Comment