Tuesday, January 20, 2004

பெயரிலி வலைப்பதிவு

இன்று வலைப்பூ மூலம் பெயரிலி (anonymous) என்பவரது வலைப்பதிவைப் பார்த்தேன். மரத்தடி, ராயர்காபிகிளப் மற்றபல தமிழ் யாஹூ குழுமங்களில் உறுப்பினராக இருக்கும் ஒருவரது வலைப்பதிவு என்று புரிகிறது.

வேண்டுமென்றே மொழியைக் குழப்பி கொச்சைத் தமிழில் எழுதியிருந்தாலும் பல 'புனிதப் பசுக்களை' அங்கதம் செய்வதாக அமைந்திருக்கிறது (என் வலைப்பதிவுகளையும், யாஹூ குழும அஞ்சல்களையும் சேர்த்துத்தான்). நான் அ.மார்க்ஸ் பற்றி எழுதியிருந்ததைக் கண்டித்து "[மார்க்ஸ்] பத்ரியவிட தமிழ நெடுங்காலம் அறிஞ்சவருங்கிறத பத்ரி தெரிஞ்சுக்கிறது நல்லது" என்று சொல்லியிருக்கிறார். ஒத்துக் கொள்கிறேன். மார்க்ஸ் கடுமையான உழைப்பாளி. அவர் வெளியிட்டிருக்கும் புத்தகங்களும், ஒவ்வொரு வாரமும்/மாதமும் அவர் எழுதும் கட்டுரைகளும் அவரது தரப்பு நியாயத்தை வெகு அழகாக முன்வைக்கின்றன. அவர் கருத்துக்களோடு அனைவரும் ஒத்துப் போகாவிட்டாலும், மரியாதை தரவேண்டிய அறிஞர்.

மாலனின் திசைகள் முதல் தமிழ் யூனிகோடு மின்னிதழா? இல்லை மகேனின் எழில்நிலா முதல் மின்னிதழா? ஏன் சாரு நிவேதிதாவைக் கண்டித்தவர்கள் மாலனைக் கண்டிக்கவில்லை என்பது போல் எழுதியுள்ளார். மகேனின் தளம் உபயோகமானது, ஆனால் மின்னிதழ் என்ற வரையறைக்குள் அதைக் கொண்டுவர முடியாது என்பது என் எண்ணம்.

1 comment:

  1. ***ஏன் சாரு நிவேதிதாவைக் கண்டித்தவர்கள் மாலனைக் கண்டிக்கவில்லை ****

    ஹைப்பர் லிங்க் சரியாக சுட்டியைத் தரவில்லை. எங்கேயோ போகிறது!

    ReplyDelete