கண்ணில் படாமல் மறைந்திருந்த செய்தி. இடதுசாரி கம்யூனிஸ்டுகள் இந்திய இராணுவத்தின் 'பீஷ்மா' டாங்குகளில் திரிசூலச் சின்னம் இருப்பதைக் கண்டித்திருக்கிறார்களாம்.
கம்யூனிஸ்டுக் கட்சியின் வரதராஜன் மதச்சின்னங்களை டாங்கில் பொறித்திருப்பது நாட்டின் மதச்சார்பின்மைக் கொள்கைக்கு எதிராக உள்ளது என்று புதிதாகக் கண்டுபிடித்துக் கூறியுள்ளார். நம் நாட்டில் அக்னி, த்ரிஷூல், பீஷ்மா, அர்ஜுன் என்று இந்துப் புராணங்களில் வரும் கடவுளர்கள், நாயகர்கள் பெயர்கள்தான் ஆயுதங்களுக்குப் பெயராகப் பயன்படுத்தப்படுகிறது. எதிர்ப்பதாயிருந்தால் இந்தப் பெயர்களையே எதிர்க்க வேண்டியிருக்கும். திரிசூலச் சின்னம் இருப்பதை எதிர்த்தால், த்ரிஷூல் என்று பெயர் வைத்திருப்பதற்கு என்ன சொல்ல? இதனால் பாஜகவுக்கு ஓட்டுகள் அதிகமாக விழுந்திடுமோ என்ற எண்ணமா? பொதுமக்கள் டாங்கில் என்ன சின்னம் பொறிக்கப்பட்டுள்ளது என்று தினமும் பார்த்துக் கொண்டா இருக்கிறார்கள்?
வரலாறு,கனவு, கொற்றவை, கீழடி
3 hours ago
எங்கள் கருப்பண்ணசாமியின் ஆயுதமான அரிவாளைக் கட்சிக் கொடியில் வைத்திருக்கும் கம்யூனிஸ்டுகள் இப்படிச் சொல்வது ஆச்சரியமளிக்கிறது.
ReplyDelete.