இந்த ஒப்பீட்டில் பொருளாதாரத் துறையில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் GDP (Gross Domestic Product - இதன் அங்கீகரிகப்பட்ட தமிழாக்கம் என்னவென்று தெரியவில்லை) என்னும் சொல்லின் பொருளை நீங்கள் முதலில் அறிந்து கொள்ள வேண்டும். GDP என்பது ஒரு நாட்டில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் நுகரப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின் சந்தை விலை. GDP = நாட்டின் நுகர்வோர் அனைவரும் செய்யும் செலவு + அரசு மற்றும் தனியார் செய்யும் முதலீடு + ஏற்றுமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை - இறக்குமதியாகும் பொருட்கள்/சேவைகளின் விலை. இதில் கருப்புப்பணம், கருப்புமுதலீடுகள், கடத்தல், கஞ்சா மற்றும் சட்டவிரோதமானவை அடங்காது. இந்த GDPயை எப்படிக் கணக்கிடுகிறார்கள் என்பது எனக்கு எப்பொழுதும் ஆச்சரியத்தைக் கொடுக்ககூடிய ஒன்று. ஏதோ ஒரு ஊரில் ஒருவர் பெட்டிக்கடை நடத்தச் செய்யும் முதலீடு எப்படி இந்த மையப் புள்ளியியல் துறைக்குத் தெரிய வரும்?
எப்படியோ, ஒவ்வொரு காலாண்டிலும் இந்தத் தகவல் மையப் புள்ளியியல் துறையால் வெளியிடப்படுகிறது. அதன்படி நடந்து முடிந்த காலாண்டில் 8.4% வளர்ச்சி அத்தனை துறைகளிலும் சேர்ந்து நடந்துள்ளது. துறை வாரியாகக் கீழே:
GDP | 2002 Q3 கோடி ரூபாய்கள் | 2003 Q3 கோடி ரூபாய்கள் | விழுக்காடு அதிகம் | |
1 | விவசாயம், மீன்வளம், காடு வளம் | 53,105 | 57,033 | 7.4% |
2 | கனிம வளம் | 6,999 | 7,157 | 2.3% |
3 | பொருள் உற்பத்தி | 55,098 | 59,124 | 7.3% |
4 | மின்சாரம், எரிவாயு, தண்ணீர் | 8,042 | 8,272 | 2.9% |
5 | கட்டிடம் கட்டுதல் | 16,709 | 17,786 | 6.4% |
6 | வியாபாரம், சுற்றுலா (விடுதிகள்+போக்குவரத்து), தொலைதொடர்பு | 74,643 | 83,495 | 11.9% |
7 | வங்கி, காப்பீடு, வீட்டு மனை, தொழில் சேவைகள் | 40,944 | 43,924 | 7.3% |
8 | தனியார், சமூகம் தொடர்பான சேவைகள் | 42,805 | 46,622 | 8.9% |
மொத்தம் | 298,345 | 323,414 | 8.4% |
இதில் தனியார் மற்றும் சமூகம் தொடர்பான சேவைகள் என்றால் முடி வெட்டுவது, அழகு நிலையத்தில் கால் நகம் வெட்டுவது, பல் ஆஸ்பத்திரியில் பல் பிடுங்குவது, கல்யாணம் பண்ணிவைக்க ஐயர் காசு வாங்குவது இதெல்லாம் வருமென்று நினைக்கிறேன். இதில் ஒருசில கூட்டுசேர்த்தல் புரியமாட்டேன் என்கிறது. ஏன் வியாபாரத்தையும் (உப்பு, புளி, டயபர், ஷேவிங் கிரீம் விற்பது), தொலைதொடர்பையும் ஒன்றாகப் போட்டுள்ளனர் என்று புரியவில்லை. பிரித்திருந்தால் இன்னமும் நன்றாக இருந்திருக்கும்.
தி இந்து செய்தியில், இந்த வருடத்தைய வளர்ச்சியை, போன வருடத்தைய வளர்ச்சி விகிதத்துடன் ஒப்பிட்டுக் காட்டியுள்ளனர்.
No comments:
Post a Comment