சிறுகதை முதல் பரிசு: ரூ. 5,000 இரண்டாம் பரிசு: ரூ. 2,500 | புதுக்கவிதை முதல் பரிசு: ரூ. 5,000 இரண்டாம் பரிசு: ரூ. 2,500 |
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் இந்த யாஹூ! குழுமத்தில் உறுப்பினராகச் சேர வேண்டும். படைப்புகளை இந்தக் குழுமத்திற்கு மின்னஞ்சலில் அனுப்ப வேண்டும். இந்தப் படைப்புகள் வேறெங்கும் வெளிவந்திருக்கக் கூடாது. இந்தப் போட்டிக்கு அனுப்பப்படும் படைப்புகள் மரத்தடி இணையத்தளத்தில் இடம்பெறும்.
சிறுகதைப் போட்டிக்கு நடுவர் திண்ணை இணைய இதழின் ஆசிரியர் குழுவின் உறுப்பினர் திரு. கோபால் ராஜாராம்.
புதுக்கவிதைப் போட்டிக்கு நடுவர் எழுத்தாளர் திருமதி காஞ்சனா தாமோதரன்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வளரும் எழுத்தாளர்கள் இணையக் குழுக்களில் எவ்வாறு கலந்து கொள்வது என்று அறிந்து கொள்ள விரும்பினால், தாராளமாக என்னை அணுகலாம்.
No comments:
Post a Comment