காலச்சுவடு இதழில் வரும் ஒரு கட்டுரையப் பற்றி எழுதியிருந்தேன். காலச்சுவடின் 48வது இதழிலிருந்து ஆரம்பித்து வரும் அனைத்து இதழ்களின் கட்டுரைகள், கதைகள் முதலியன இனி சிஃபி.காம் இணைய தளத்தில் வரும் என்கிறார் நண்பர் வெங்கடேஷ். நீங்கள் போக வேண்டிய இடம் இதோ.
நிறைய நல்ல சிறுகதைகள், விமரிசனங்கள், ஜெயகாந்தன் பற்றிய சர்ச்சைக்குறிய விமரிசனம் ஆகியவை அங்குள்ளன. கீழே நான் குறிப்பிட்ட 'வெற்றிடத்திலிருந்து எழும் குரல்' கட்டுரையும், இதழ் 50 இன் மற்ற படைப்புகளும் சீக்கிரமே ஏற்றப்படுமாம்.
காலச்சுவடு ஏற்கனவே ஒரு இணைய முகவரியில் இருந்து வந்தது. அங்கு அவ்வப்போது ஒருசில படைப்புகளே வெளிவந்து கொண்டிருந்தன. மேற்குறிப்பிட்ட இடத்தில் முழு இதழும் வரும் என்கிறார் வெங்கடேஷ்.
நற்றுணை கலந்துரையாடல்: இரா. முருகன்
4 hours ago
No comments:
Post a Comment