Monday, November 03, 2003

You hurt my feelings! - 2

அசோகமித்திரனின் 'படைப்பாளிகள் உலகம்', பக்கங்கள் 106-107 இலிருந்து, AK ராமானுஜன் பற்றிக் குறிப்பிடுகையில்

சூழ்நிலை மனிதரிடம் ஏற்படுத்தும் மாற்றங்களை ராமானுஜன் கூர்ந்து கவனித்து வந்தார். அப்போது அவருடைய மகனுக்கு ஐந்து வயதுதானிருக்கும். ஆனால் அமெரிக்காவில் மூன்று நான்கு ஆண்டுகள் கழித்து விட்டான். அப்பாவிடம் ஏதோ கோபம், "you hurt my feelings." என்றான். எனக்கும் ஒரு சிறுவன் ஒரு நுட்பமான மனநிலையைச் சொற்களால் விவரிக்க முடிந்தது குறித்து வியப்புத்தான். ராமானுஜனுக்கும் வியப்பு. இந்தியாவில் வளர்ந்த குழந்தை இப்படிச் சொல்லுமா? "நான் உன்னோடு பேச மாட்டேன், போ," என்று சொல்லும். "என்னோடு பேசவேண்டாம், போ," என்றும் சொல்லலாம். "என் உணர்வுகளை வருத்தியிருக்கிறீர்கள் என்று எனக்குக் கூடச் சொல்லத் தோன்றியிருக்காது." என்று ராமானுஜன் சொன்னார்.

No comments:

Post a Comment