ஜெயலலிதா மீது பத்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடந்து வருகின்றன. இவை அனைத்துமே கடந்த 91-96ம் ஆண்டுகளில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தின் நிகழ்வுகளோடு தொடர்புடையவை.
- பிளசன்ட் ஸ்டே ஓட்டல் வழக்கு: கொடைக்கானலில் ஏழு மாடிக் கட்டிடம் கொண்ட ஓட்டலைக் கட்ட ஜெயலலிதா அனுமதி வழங்கினார். அரசு விதிகளை மீறி இதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக வழக்கு குறிப்பிடுகிறது. கடந்த 2000ம் ஆண்டு பிப்ரவரி மாதம் சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் ஜெயலலிதாவிற்கு ஒரு வருட சிறைத் தண்டனை விதித்தது.
தற்போதைய நிலை: மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
- கலர் "டிவி' வழக்கு: தமிழகப் பஞ்சாயத்துகளுக்கு வழங்க வாங்கப்பட்ட 40 ஆயிரம் கலர் டெலிவிஷன் செட் விவகாரத்தில் லஞ்சம் பெறப்பட்டதாகக் கடந்த 2000ம் ஆண்டு மே மாதம் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுவிக்கப்பட்டார்.
தற்போதைய நிலை: சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு மனு விசாரணை நிலுவையில் இருக்கிறது.
- நிலக்கரி இறக்குமதி வழக்கு: சென்னை சிறப்பு நீதிமன்றம் இந்த வழக்கில் இருந்து ஜெயலலிதாவை விடுதலை செய்தது.
தற்போதைய நிலை: மேல் முறையீட்டு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
- ஸ்பிக் பங்கு விற்பனை வழக்கு: ரூ.28.18 கோடி சம்பந்தப்பட்ட ஸ்பிக் பங்குகள் விற்பனை தொடர்பான வழக்கை சி.பி.ஐ கையாண்டது.
தற்போதைய நிலை: இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
- அனாமதேயப் பரிசு வழக்கு: வெளிநாட்டில் இருந்து அனாமதேயமாக மூன்று லட்சம் டாலர் பரிசு பெற்றுக் கொண்டதாக வழக்கு. இதனை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
தற்போதைய நிலை: இவ்வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
- மீனா அட்வர்டைசிங் வழக்கு: இரண்டு கோடி ரூபாய் சம்பந்தப்பட்ட விளம்பரம் தொடர்பான வழக்கு.
தற்போதைய நிலை: விசாரணை செய்து வரும் அமைப்பு இன்னும் குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்யவில்லை.
- கிரானைட் குவாரி முறைகேடு: பல கோடி ரூபாய் தொடர்புள்ள வழக்கு.
தற்போதைய நிலை: சி.பி.சி.ஐ.டி இந்த வழக்கை விசாரித்து வருகிறது. இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
- வருமானத்திற்கு அதிகமான சொத்துக் குவிப்பு வழக்கு: வருமானத்தை விட அதிகமாக ரூ.66.65 கோடி சொத்து சேர்த்ததாகத் தொடரப்பட்ட வழக்கு.
தற்போதைய நிலை: சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த இவ்வழக்கின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் அதிரடித் தீர்ப்பையடுத்து, கர்நாடக மாநலத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பெங்களூரில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டதும் வழக்கு விசாரணை தினந்தோறும் நடக்கும்.
- டான்சி வழக்கு (இரு வழக்குகள்): உச்சநீதிமன்றத்தில் நாளைக் காலை (திங்கட்கிழமை) தீர்ப்பு.
No comments:
Post a Comment