Monday, November 03, 2003

You hurt my feelings!

காசி ஆறுமுகம் தனது வலைப்பதிவில் தன் ஐந்து வயதுப் பெண் (அமெரிக்காவில் வசிப்பவர்) தன் தாயிடம் "you hurt my feelings" என்று சொல்கிறது என்கிறார். அசோகமித்திரன் தனது 'படைப்பாளிகள் உலகம்' கட்டுரைத் தொகுப்பில் இதே விஷயத்தைப் பற்றிப் பேசுகிறார். பேராசிரியர் AK ராமானுஜன் அசோகமித்திரனிடத்தில் அமெரிக்காவில் வளர்ந்த தன் மகன் "you hurt my feelings" என்று சொன்னதாகவும், அதே பொருள் பதியுமாறு எவ்வளவு இந்தியத்/தமிழ்க் குழந்தைகள் சொல்லியிருக்க முடியும் என்றும் ஆச்சரியப்பட்டதாகவும் குறிப்பிடுகிறார். ஒரு தமிழ்க் குழந்தை 'நீ செய்வது/சொன்னது எனக்குப் பிடிக்கவில்லை' என்று சொல்லியிருக்கும். ஆனால் 'நீ செய்வது/சொன்னது என் மனதை வேதனைப்படுத்துகிறது' என்று பொருள் பட சொல்லியிருக்குமா?

இப்பொழுது எதைப்பற்றிப் பேசுகையில் அசோகமித்திரன் இதைக் குறிப்பிட்டார் என்பது மறந்து விட்டது. வீட்டுக்குப் போய் மீண்டும் புத்தகத்தைப் பார்த்துவிட்டு எழுதுகிறேன்.

No comments:

Post a Comment