சனி, ஞாயிறு சமயத்தில் இரு கதைகளைப் படித்து முடித்தேன். இரண்டும் தேடித் தேடிக் களைத்துப் போனது. பாராவின் புண்ணியத்தில் கிடைத்தது. ஜி.நாகராஜனின் 'குறத்தி முடுக்கு' - குறுநாவல், அசோகமித்திரனின் 'கரைந்த நிழல்கள்' நாவல்.
இரண்டைப் பற்றியும் விரிவாகப் பின்னர் எழுதுகிறேன். கரைந்த நிழல்கள் அருமையான கதை. இந்தப் புத்தகத்தின் பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது.
இது போல் விளக்கமான விமரிசனம் நமது வாசக அனுபவத்தைப் பெரிதும் விரிவுபடுத்த உதவுகிறது.
எப்படியாவது தேடிப்பிடித்துப் படித்து விடுங்கள்.
Manasa Book Club – December Meet
6 hours ago

---பின்னிணைப்பாக மணி என்பவர் எழுதிய விமரிசனமும் உள்ளது. இந்த விமரிசனம் இந்தக் கதையைப் புரிந்து கொள்ள, இந்தக் கதையின் மூலம் அசோகமித்திரன் என்ன சாதித்துள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ள வெகு உதவியாயிருக்கிறது. ---
ReplyDeleteஇந்த மேட்டர் கிடைக்குமா???